இந்தியா- ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிகிதா கொன்ட்ரத்யேவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை வரும் ஜூனில் தொடங்கி, நிகழாண்டு இறுதிக்குள் இறுதிவடிவம் பெறும் என்றும், இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான பரஸ்பர உறவு வலுபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.