திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் பகுதியில் உள்ள கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. ஜெல்லி மீன்களின் திரவத்தால் பக்தர்களுக்கு தோல் பாதிப்புடன் கூடிய நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே பக்தர்கள் கவனமுடன் கடலில் குளிக்க கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.