நாளை 5-வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக நடைபெற்379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
5-வது கட்டமாக, 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5-வது கட்ட தேர்தலில், மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில்,
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் போட்டியிடுகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது வாக்குகளை செலுத்தினர்.
5-வது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.