மதுரை மாவட்டம், பரவை பகுதியில் காய்கறி வியாபாரியை வெட்டிக்கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பரவை காய்கறி சந்தையில், கோபால் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் விபாயாராம் செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு கோபாலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் கோபால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.