பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் உடுமலை அடுத்த ஊஞ்சலம்பட்டியில் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.