மத்தியில் அடுத்த ஆட்சி அமைந்ததும், தொழில் நிறுவனங்களை மகிழ்விக்கும் விதத்தில் அந்நிய நேரடி முதலீடு விதிகள் எளிமைப்படுத்தப்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாக தொழில் மற்றும் உள்நாட்டு வணிக ஊக்குவிப்புத் துறை செயலர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே விண்வெளித் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்து, அதற்கான எஃப்.டி.ஐ. விதிகளை மத்திய அரசு இலகுவாக்கியது.
தென்கிழக்கு ஆசியாவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எஃப்.டி.ஐ. விதிகள் எளிமையான முறையிலேயே பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.