திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில், கைலாச வரதராஜ பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
700 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கைலாச வரதராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு, யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதேபோல 20 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.