5-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காலையிலேயே வாக்களித்தார்.
பிரதமர் மோடி கூறியது போல், அனைவரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டிலுள்ள தமது குடும்பத்தினர் அனைவரும் வாக்களிப்பதற்காக இந்தியா வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தனது சொந்த கிராமமான கவுரிகஞ்சில் வாக்களித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காக தவறாமல் வாக்களிக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்றும் அவர் கூறினார்.