திருப்பத்தூர் மாவட்டம், அறுவாமலையில் மரத்தில் தேன் எடுக்கச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஆம்பூர் அடுத்த காரப்பட்டைச் சேர்ந்த சிவக்குமார், சின்ன வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் கோதண்டன் உள்ளிட்ட ஐவர், அறுவாமலைக்கு சென்று மரத்தில் தேன் எடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த சிவக்குமார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த மாரியப்பன் மற்றும் கோதண்டன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.