கடலூர் மாவட்டம், கருங்குழி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
கருங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு கள்ளாங்குளத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.