தமிழகத்தில் பெய்த கோடை மழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த தொடர் மழையின் காரணமாக கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட அம்பலக்குளம் நிறைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதே போல் பாறைக்கா மடம் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இதனால் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து வருவதுடன், தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.