பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் CSK வெளியேறியது ஏன்?
Oct 28, 2025, 10:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் CSK வெளியேறியது ஏன்?

Web Desk by Web Desk
May 20, 2024, 10:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 6வது கோப்பை கனவை எங்கே கோட்டை விட்டது சி.எஸ்.கே.? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

2024 ஐபிஎல் தொடர் லீக் ஆட்டத்தில் வாழ்வா, சாவா போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய பெங்களூரு அணி அதிரடியாக ஆடி 218 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத மிகப் பெரும் சாதனையை செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால், 219 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

201 ரன்கள் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தாலும், பேட்டிங்கில் நிலையான தொடக்கம் இல்லாத காரணத்தால் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். பேருக்கு மட்டுமே சென்னை அணியாக இல்லாமல், அவ்வப்போது சென்னை 28 திரைப்படத்தில் வருவது போல பல டிவிஸ்டான போட்டிகளை விளையாடுவது தான் மஞ்சள் பாய்ஸ்-ன் பழக்கப்பட்ட விஷயம்…

எப்போதுமே ஆர்சிபி அணியை எதிர்த்து நின்று அடித்து விளையாடும் சென்னை அணி, கடைசி போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்தது என்ன தெரியுமா? பவர் பிளே ஓவர்களை நாலா பக்கமும் சிதற விடுவார்கள் என்று நம்பியிருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியது தான்.

மேலும், ராஹானே மற்றும் ரச்சின் கைகளில் பவர்பிளே ஓவர் சிக்கிக்கொண்டதால், 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சென்னை அணியோ, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. குறிப்பாக சிவம் துபே வெளியேறியதும், மிகப்பெரும் பொறுப்புடன் களத்திற்கு வந்தார் மகேந்திர சிங் தோனி.

இதுபோன்ற பல சவாலான சூழல்களை சமாளித்த தோனி, களத்தில் குதித்ததும், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சில லூஸ் பால்களை வீசியதால் விமர்சனங்களுக்கு உள்ளானது. எது எப்படியோ, 201 ரன்கள் எட்டிவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்பது மட்டுமே சென்னை அணியின் ஒரே குறிக்கோளாக இருந்தது. அப்போது, சென்னை அணி பிளே வாய்ப்பை உறுதி செய்ய 20 ஆவது ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் யாஷ் தயாள் பந்துவீச தயார் ஆனார். முதல் பந்தை ஃபுல் டாசாக வீசிய மறு கணமே, வானத்தை பார்த்து 110 மீட்டர் தூரம் மிகப்பெரிய சிக்சராக விளாசினார் எம்எஸ் தோனி.

இலக்கை அடைய மீதம் உள்ள 5 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது, அடுத்த பந்தை கேட்ச் கொடுத்து தோனி வெளியேறினார். ஷார்துள் தாகூர், ஜடேஜா ஆகியோர் ஏமாற்றியதால் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மேலும் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து நடையை கட்ட, ஆர்ப்பரித்த ஆர்சிபி வீரர்கள், பிளே ஆப் வாய்ப்பை கொண்டாடினர்.

தோனிக்கு கடைசி சீசன், 6 வது ஐபிஎல் கோப்பை, ருதுராஜின் வெற்றிப் பயணம் என்றெல்லாம் பேசிய சென்னை ரசிகர்கள், மீம் போட கூட மனமில்லாமல், மைதானத்தில் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த தோல்வியை தாங்க முடியாமல், தோனி கண்கலங்கியது நேரலையில் காட்டப்பட்டது. அதை கண்டு சிஎஸ்கே ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், வழக்கம் போல் தோனி வருவார், ஓய்வு குறித்து ஏதேனும் கூறுவார் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இருந்தாலும் Definitely Not எனும் அந்த மந்திரச் சொல்லை அவர் சொல்லாமல் இருப்பதும் கூட ஓய்வுக்கான மறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள்….!

Tags: Why did CSK go out without qualifying for the play-off round?
ShareTweetSendShare
Previous Post

ஈரான் அதிபர் மரணம் இந்தியாவிற்கு பேரிழப்பு ஏன்?

Next Post

தொடர்ந்து இரவுப் பணியா? நீரழிவு ஏற்பட வாய்ப்பு!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies