நெல்லை சிவந்திபுரம் கிராமத்தில் அட்டகாசம் செய்துவரும் மந்திக் குரங்குகளை கூண்டு அமைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அடுத்த சிவந்திபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக மந்திக் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வந்தது.
அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 5 பேரை குரங்குகள் தாக்கியது. இந்நிலையில் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.