கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில்கள் திறந்தே இருப்பதால், மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது.
பள்ளி வகுப்பறை வெளிப்புறம் மற்றும் விளையாட்டு மைதானம் என எங்கு பார்த்தாலும் மது பாட்டில்களை வீசி சென்று உள்ளனர்.
பள்ளி திறக்க சில நாட்களே உள்ள நிலையில், சிதறி கிடக்கும் மதுபாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர்.