கடல் மட்டம் அதிகரிப்பதால் சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பனிப்பாறை உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால், தாழ்வான இடங்களில் அமைந்துள்ள துறைமுகங்கள் பாதிப்பை சந்திப்பதுடன், உலக நாடுகளுக்கு இடையிலான எண்ணெய் வர்த்தகமும் முடங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக சீனாவை சேர்ந்த ஓர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடல் மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் கூட ஆசிய கண்டத்தில் மொத்தமுள்ள 15 டேங்கர் டெர்மினல்களில், 12 டெர்மினல்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.