ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டது.
அகமாதாபாத்தில் உள்ள குஜராத் கல்லூரி மைதானத்தில் ஆர்சிபி அணி இன்று காலை பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தது. இந்த நிலையில், விராட் கோலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் உடனடியாக அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக பயங்கரவாத நடவடிக்கை சந்தேகத்தின்பேரில், 4 பேரை அகமதாபாத் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.