கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டியில் தென்னக ரயில்வே அணி வெற்றி பெற்றது.
திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் முதலில் களமிறங்கிய தென்னக ரயில்வே டில்லி அணியும், சி.ஆர்.பி.எப் டில்லி அணியும் அதிரடியாக விளையாடிய நிலையில், தென்னக இரயில்வே அணி 56-44 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.