கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், குமரியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இதனால் கோதையார், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தண்ணிர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திற்பரப்பு அருவியில் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.