கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், 8வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
மேலு10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் குளச்சல், முட்டம் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.