வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
பிரஜ்வல் ரேவண்ணா தற்போது எங்கு உள்ளார் என்பது தமக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். அவர் எங்கிருந்தாலும் நாடு திரும்பி சரணடைய வேண்டும் என்றும், அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தான் விடுக்கும் முறையீடு அல்ல, எச்சரிக்கை என்றும் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
அவர் நாடு திரும்பவில்லை என்றால் அனைவரின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்றும், தம்மீது மரியாதை இருந்தால் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற விருப்பம் இல்லை என்றும் தேவகவுடா கூறியுள்ளார்.