தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 12 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும்.
நாளை மறுதினம் நள்ளிரவில் சாகர் தீவு – கெபுபாரா இடையே கடுமையான சூறாவளி புயலாக கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.