கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி கோட்டூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றது.
இதனால் அவதிக்குள்ளான பயணிகள் கீழே இறங்கி, ஐலேசா ஐலேசா எனக் கூறியபடி பேருந்தை தள்ளிச் சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், தமிழக அரசு காலாவதியான பேருந்துகளை இயக்கக் கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.