மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.