ஏர்வாடி தர்கா வாசலில் சட்டவிரோத கடைகளை அகற்ற வேண்டும் என யாத்திரிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் தர்காவுக்கு வெளியே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென யாத்திரிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.