சென்னை பெரம்பூரில் மதுபோதையில் இருந்த காவலர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புளியந்தோப்பு திருவிக நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான முகமது பிலால் மற்றும் அவரது சகோதரர் முகமது அப்சர் ஆகிய இருவரும் இரவு நேரத்தில் தேநீர் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது மதுபோதையில் வாகனத்தை நிறுத்தக் கூறி பின் தொடர்ந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் அனுஜன், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர், சிறுவர்களை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பள்ளி மாணவன் முகமது அப்சர் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.