ஹரியானா மாநிலம், அம்பாலா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
அம்பாலா அருகே டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.