மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் தொடங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினத்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
கல்லார், ஹில்கிரோ உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததன் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நிறவடைந்ததால் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் உதகை செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.