கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த கனமழையால், திற்பரப்பு அருவியில் அளவுக்கு அதிகமான நீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.
இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேலிகள் அமைக்கும் பணி முடிவடைந்தை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.