ராமநாதபுரத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் 700 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்தனர்.
கேணிக்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஒரு வாகனத்தை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், 700 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் வந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.