புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
தேனி பிள்ளையார் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சிவகங்கை, தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் பங்கேற்றன.
போட்டி தொடங்கியுடன் வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு அடக்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.