டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குடும்பத்தினருடன் ஜனநாயக கடமை ஆற்றினார்.
முதல் முறையாக வாக்களிக்கும் போது வாக்குச்வாடிக்கு தந்தையுடன் சென்றதாக தெரிவித்தார். தற்போது 95 வயதாகும் தனது தந்தையுடன் வாக்களிக்க வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக தெரிவித்த அவர், ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததை சுட்டிக்காட்டினார்.