நாட்டில் வட மாநிலங்களில் வெப்பம் வாட்டுவதால் ஒரேநாளில் 239.96 ஜிகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.
கோடை காலத்தில் பயன்படுத்தப்பட்ட உச்சபட்ச மின்சார அளவு இது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன் கடந்த வியாழக்கிழமை 236.59 ஜிகாவாட் மின்சாரமும், புதன்கிழமை 235.06 ஜிகாவாட் மின்சாரமும் பயன்படுத்தப்பட்டதாக எரிசக்தித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.