அமெரிக்காவில் வீட்டுக்குள் புகுந்த முதலை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள 104 வயது மூதாட்டியின் பண்ணை வீட்டுக்குள் முதலை குட்டி நுழைந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, வனத்துறையினருக்கு தகவலளித்தார். இதன்பேரில், வனத்துறையினர் வந்து அந்த முதலை குட்டியை கையில் லாவகமாக பிடித்து, காட்டில் சென்று விட்டனர்.