வேலூர் அருகே பெட்ரோல் நிலையத்தில் பெண் மீது கார் மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியூர் மலைக்கோடி- பென்னாத்தூர் சாலையில் உள்ள ஆவாரம்பாளையம் பெட்ரோல் பங்கில் பெண் ஒருவர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பெண்ணிண் மீது மோதியது.
இதில் அந்த பெண்ணின் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் பெட்ரோல் பங்கின் இயந்திரம் உடைந்து விழுந்தது.