திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து ராஜகோபுரம் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்தனர்.