திருப்பத்தூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாடிவாசலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூலாங்குறிச்சியில் வசிக்கும் மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு ஆண்டும் மாறி மாறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வருடம் ஒன்று சேர்ந்து நடத்த திட்டமிட்டு, ஒருசில இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்தில் மனு அளித்தனர்.
ஆனால் அடுத்த வருடம் இணைந்து நடத்துமாறு வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாடிவாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.