ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்துள்ள கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அருபுக்கோட்டையில் வங்கியில் பணம் எடுத்து வந்தவரிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற அவுலா ராஜேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கொள்ளை கும்பல் புகுந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து மீதம் உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.