விழுப்புரத்தில், சக்ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு என நடத்தப்பட்ட கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை நிறைவு செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய அளவில் செயல்படும் சக்ஷம் அமைப்பு நாடு முழுவதும் பின்தங்கிய மக்களுக்காக பல்வேறு தொழிற் பயிற்சிகளை அளித்து, அவர்களது வாழ்க்கைதரம் மேம்பாடு அடைய செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில், ஏழை, எளிய மக்கள் முன்னேற்றத்திக்காக இரவு-பகலாக பாடுபட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில், கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அனைத்து வகை கைப்பேசிகளை பழுது நீக்குவது எப்படி? என்பது உள்ளிட்ட பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.