உதகை 126-வது மலர் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுவதகா பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இந்த கண்காட்சியை நேற்று மாலை வரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 28 பேர் கண்டு ரசித்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.