ரீமல் புயல் காரணமாக மதுரையில் இருந்து துபாய் செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரீமல் புயல் தீவிரமாக வலுப்பெற்றதால் ஏராளமான பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய் செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
70 பயணிகளுடன் பயணிக்க இருந்த இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.