இதுவரை நடந்து முடிந்த வாக்குப் பதிவில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டதாகவும், இனி 400 தொகுதிகளை எட்டுவதுதான் இலக்கு என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், நேற்றுடன் ஆறுகட்டத் தேர்தல் முடிந்த நிலையில், பாஜக 310 இடங்களைப் பெற்றுவிட்டதாக கூறினார்.
மேலும் அடுத்தகட்டத் தேர்தலில் 400 தொகுதிகளைப் பெறுவதுதான் இலக்கு என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.