பீகாரில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது காட்டாட்சி நடைபெற்றதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் ஜெஹனாபாத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு முன், பிற்பகல் 3 மணிக்குப் பிறகு இந்த ஜெஹனாபாத் பகுதிக்கு யாரும் வர முடியாத அளவுக்கு ரவுடிகளின் அச்சுறுத்தல் காணப்பட்டதாக தெரிவித்தார்.
கொலையும், வழிப்பறியும் அன்றாடம் நடைபெற்றதால் இங்கிருந்து விவசாயிகள் புலம்பெயர நேரிட்டதாகவும் ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.