கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யா, ரஷ்மிதா, பாலமித்ரன், ஜானுஷா ஆகிய 4 குழந்தைகள், அங்கிருந்த எலி பேஸ்ட்-யை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த மணிகண்டன், குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.