உடல் உறுப்புகள் தானம் செய்யும் விழிப்புணர்வில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அரசு அறுவை சிகிச்சை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பூபதி என்பவரின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனை மூலம் தானமாக பெறப்பட்டு 5 நபர்களுக்கு பொருத்தப்பட்டது.
இதையடுத்து அரசு மருத்துவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை தமிழக அரசு செய்து வருவதாக கூறினார். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.