திருச்சியில் முட்புதரில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை மீட்ட தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
திருச்சி கீழ தேவதானம் ரயில்வே கேட் அருகே உள்ள முட்புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள், குழந்தையை பத்திரமாக மீட்டு இ.பி ரோடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.