சிவகங்கையில் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்த தாயை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை நாட்டா குடியைச் சேர்ந்த சந்திரசேகர் மஞ்சு தம்பதியருக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்துள்ளது. இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் குழந்தையுடன் மஞ்சு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மஞ்சு வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணவர், மஞ்சுவிற்கு போன் செய்தபோது, குழந்தையை நாட்டாகுடி கட்டப்புலி கோயில் அருகே கட்டைப் பையில் வைத்துவிட்டு நாகர்கோவில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கணவர் அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர், இறந்த நிலையில் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குழந்தையின் தாயான மஞ்சுவை வலைவீசி தேடி வருகின்றனர்.