தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டியில் பனையேறிகள், பனை படையல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில், பனை தொழிலுக்கு உதவியாக இருக்கும் உபகரணங்கள், பதனீர், நுங்கு ஆகியவற்றுடன் அசைவ சமையல் செய்து படையலிட்டு வழிபட்டனர். மேலும், பனை மரங்களின் முன்பு அனைவரும் விழுந்து வணங்கினர்.
பின்னர், கள் என்பது ஒரு உணவு பொருள் என்பதை விளக்கும் வகையில், சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் என அனைவரும் கள் பருகி பனை படையல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.