எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமென்பதே ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்தம் என பாஜக தேசியத் தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
நாளிதழ் ஒன்றிற்கு நேர்காணல் அளித்த ஜே.பி.நட்டா, மதுபானக் கொள்கை விவகாரமும், ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதலும் அரவிந்த் கெஜ்ரிவாலை அம்பலப் படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அனைவரும் மாறுவேடத்தில் உள்ள நகர்ப்புற நக்சல்கள் என மிகக் கடுமையாக விமர்சித்த அவர்,
யாரை எதிர்த்து கட்சி தொடங்கினார்களோ அவர்களுடனே தற்போது கூட்டணி அமைத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கோயபல்ஸின் கொள்கைகளை நம்பியே செயல்படுவதாகவும் ஜேபி நட்டா கூறினார்.