அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் எனக் கூறிய அவர், பாஜக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை முன் கூட்டியே உணர்ந்துள்ளதால், இப்போதே அதற்கான காரணங்களைத் தேடி வருவதாகவும் அமித்ஷா கூறினார்.