கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்து, மர்மநபர் ஒருவர் ஊழியரை தாக்கும் சிசிடிவி வெளியாகியுள்ளது.
சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் திம்மராஜ் என்பவர் தமது காருக்கு டீசல் நிரப்ப சென்றுள்ளார்.
அப்போது 4 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் தராமல் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஓடி வந்து காரை வழிமறித்த ஊழியருடன் திம்மராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார்.